தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருச்சி - தஞ்சை சாலையில் விஜய் வாகனத்தை சூழ்ந்த தொண்டர்கள்!

திருச்சி - தஞ்சை சாலையில் விஜய் வாகனத்தை சூழ்ந்த தொண்டர்கள்...

News image

விஜய் வாகனத்தை சூழ்ந்த தொண்டர்கள்

Updated On :4 மார்ச் 2026, 5:42 am

திருச்சி - தஞ்சாவூர் சாலையில் இருபுறமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து விஜய்க்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டம் இன்று பகல் 12 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விஜய், சாலை வழியாக தஞ்சாவூர் சென்று கொண்டிருக்கிறார்.

ஏற்கெனவே தனது வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம் என்று விஜய் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், தஞ்சை சாலையில் முக்கிய இடங்களில் விஜய்யை பார்க்க மக்கள் திரண்டுள்ளனர்.

துவாக்குடி சுங்கச் சாவடி அருகே விஜய்யின் வாகனம் வந்தபோது, விஜய்யின் வாகனத்தை தொண்டர்கள் சூழ்ந்தனர். தொடர்ந்து வாகனத்தின் வேகத்தை குறைத்து, தொண்டர்களுக்கு விஜய் கையசைத்து சென்றார்.

தொடர்ந்து கூட்டம் நடைபெறும் திடல் அருகே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருக்கும் நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Summary

Cadres surround Vijay's vehicle on the Trichy-Tanjavur road!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.