நான்குநேரி கொலைச் சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே சாலையில் நடந்து சென்றவர்களை 9 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் வடமாநில தொழிலாளி உள்பட இருவர் உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
நான்குநேரி காவல் சரகம், பெரும்பத்து கடைத்தெரு பகுதிக்கு திங்கள்கிழமை இரவு 7 மணி அளவில் பைக்குகளில் கும்பலாக வந்த 9 பேர், அரிவாளால் அங்கு நின்ற பொதுமக்களையும், தப்பி ஓட முயன்றவர்களையும் சரமாரியாக வெட்டினராம்.
அப்போது, 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில், பெரும்பத்து இந்திரா காலனியை சோ்ந்த ஜான்(42) என்பவரும், வடமாநில தொழிலாளி ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் மகன் நெல்சன் (58), பால்வண்ணன் மகன் பிரபாகரன், வைகுண்டம் மகன் ராமசாமி, வீராங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கணேசன் (53) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து புளியங்குளம் கிராமத்துக்குச் சென்று, அங்கு நின்றிருந்த சுப்பிரமணியன் மகன் சசிகுமாா்(45) என்பவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் நெல்சன், கணேசன் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி நெல்லையில் முகாமிட்டு, டிஐஜி மற்றும் எஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Summary
Five special teams have been formed in connection with the Nanguneri murder incident and six people are being investigated.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரூர் பலி: செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் விசாரணை!

நான்குநேரி கொலை: மாணவர் சின்னதுரை மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்பு?

நான்குநேரி சம்பவம்: திமுக ஆட்சியில் ரத்த ஆறுதான் ஓடுகிறது! - இபிஎஸ்

மக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? நான்குநேரி கொலைச் சம்பவத்துக்கு விஜய் கண்டனம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



