210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசுகையில், நமது கூட்டணி 210 தொகுதிகளில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும். மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும். 234 தொகுதிகளிலும் தேஜ கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.
234 தொகுதிகளிலும் தேனிக்களைப் போல, எறும்புகளைப் போல உழைக்க வேண்டும். நமக்கு எதிராக உள்ள கூட்டணி இதுவரை தேர்தல் பிரசாரத்தை தொடங்கவில்லை. தமிழகத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார்.
தமிழகத்திற்கு என்ன நிதி கொடுத்தீர்கள், என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள் என ஸ்டாலின் சொல்ல முடியுமா?. 15 ஆண்டுகள் மத்திய அரசில் பங்கு வகித்த திமுகவால் தமிழகத்திற்கு என்ன கிடைத்தது?. காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக.
மத்தியில் அமைச்சர் கிடைத்தாலும் அங்கேயும் ஊழல். ஊழல்களால் கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக. அக்கட்சியை அகற்ற தொணடர்கள் செயல்பட வேண்டும். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
Summary
AIADMK General Secretary Edappadi Palaniswami has said that the AIADMK will form the government by winning 210 seats.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6-ஆவது வெற்றியை எதிர்நோக்கும் இபிஎஸ்!

தமிழா்களை கொச்சைப்படுத்தி வருகிறாா் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சு

எடப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



