ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோடிகளில் கடன்; நட்டாற்றில் விட்ட ராமதாஸ்! கலக்கத்தில் தொண்டர்கள்!

பாமக நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி சேர்ந்தது குறித்து...

anbumani

அன்புமணியை ஆரத்தழுவி வரவேற்ற ராமதாஸ் - DNS

Published On :30 ஜூன் 2026, 11:44 am IST

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 61-ஆவது திருமணநாள் நிகழ்வில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு தனது பெற்றோரிடம் வாழ்த்து பெற்றார். அப்போது இருவரும் உணர்ச்சிப் பெருக்கில் ஆரத்தழுவிக் கொண்டனர்.

வீட்டுக்குள் நுழைந்தவுடன் தந்தை ராமதாஸை கண்ட அன்புமணி, உணர்ச்சிப் பெருக்கில் அவரை ஆரத்தழுவிக் கொண்டார். அன்புமணியை வாஞ்சையோடு ராமதாஸ் வரவேற்றார். இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்ட நிலையில் வார்த்தைகள் வராமல், ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

இந்தச் சந்திப்பின் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே இருந்து வந்த கருத்து மோதல் முடிவுக்கு வந்துள்ளதாகவும் பாமக மீண்டும் ஒன்றுபட்டு செயல்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், ராமதாஸ் பக்கம் சென்ற முன்னாள் எம்.எல்.ஏ. அருள் உள்ளிட்ட தொண்டர்கள் நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது.

மருத்துவர் ராமதாஸும் அவரது மகனும் இணைந்தது மகிழ்ச்சி என்றாலும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இணைந்திருந்தால் கோடிகளில் கடன்பட்டிருக்க மாட்டோம், ராமதாஸுக்காகவும் கட்சிக்காகவும் சொத்தை அடமானம் வைத்து கடனில் தவிப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், பேரவைத் தேர்தலில் இணைந்து பயணித்து இருந்திருந்தால், பாமகவின் வாக்கு விழுக்காடு அதிகரித்து இருக்கும் என்றும் 15 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வென்று இருப்பார்கள் என்றும் முன்னாள் எம்எல்ஏ அருள் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் எம்எல்ஏ அருள் தலைமையில் சேலத்தில் ராமதாஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.

யாருடன் பயணிப்பது என தெரியாமல் தவித்து வரும் ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள், நட்டாற்றில் விட்டதுபோல இருப்பதாகக் கூறுகிறார்கள்.

அவர்கள், அடுத்தகட்ட முடிவு எடுக்க முடியாமல் கலக்கத்தில் உள்ளனர்.

Summary

PMK leader Anbumani Ramadoss attended the 61st wedding anniversary celebration of the party's founder, Dr. Ramadoss, and sought his parents' blessings. Overcome with emotion, they embraced each other warmly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.