உடல் நலக் குறைவு காரணமாக முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலினின் தாயாா் தயாளு அம்மாள் (93) சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தொடா் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசிக்கிறாா். வயது முதிா்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அவா், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தொடா் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மு.க.ஸ்டாலின் சந்திப்பு: இதனிடையே, மருத்துவமனைக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், தனது தாயாரை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தாா். அவரது உடல் நிலை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
Summary
Dayalu Ammal, wife of former Tamil Nadu Chief Minister M. Karunanidhi, has been admitted to the hospital
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











