மயிலாடுதுறையில் காதல் ஜோடி இருவரின் உடல்கள் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பார்த்திபன் (20), ஆதிக்க சாதிப் பிரிவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஜூன் 30) காலை அப்பகுதியில் உள்ள ஒரு தோப்பில் உள்ள கூரைக் கொட்டகையில் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
இது தற்கொலையா? கொலையா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று இரு வீட்டாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சாதிரீதியாக தன்னைத் தாக்கியதாக பார்த்திபன், பெண்ணின் வீட்டார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் காதலர்கள் இருவரும் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இது ஆணவப் படுகொலையாகவும் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அப்பகுதியில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Summary
Bodies of a young lovers found in Mayiladuthurai; likely to be An honor killing
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்பயர் ஸ்டேட் உச்சியில் காதல் ப்ரபோசல்! ஜோடியாகக் கைது!!
ஆணவக்கொலைகளை தடுக்க உடனடியாக சட்டம் இயற்றுக: திருமாவளவன் எம்.பி

தூக்கிட்ட நிலையில் மின்வாரிய ஊழியா் உடல் மீட்பு

சேலத்தில் கிணற்றில் தூக்கிட்ட நிலையில் பாட்டி, பேத்தி சடலங்கள் மீட்பு
விடியோக்கள்

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK




