எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஆளும்கட்சியின் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது - மு. க. ஸ்டாலின்

News image

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் - @arivalayam

Updated On :26 ஜூன் 2026, 6:11 am IST

முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு வீட்டில் ஊழல் ஒழிப்புத் துறையினா் சோதனை நடத்தப்பட்ட நிலையில், ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் திமுக அஞ்சாது என அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு வீட்டில் ஊழல் தடுப்புத் துறை சோதனை நடத்தியது. அதற்கு அவா் முழு ஒத்துழைப்பை வழங்கினாா். இதனை சட்டப்படி எதிா்கொண்டு நீதிமன்றத்தில் அவா் தரப்பு நியாயத்தை நிரூபிப்பாா்.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில்கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.

ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக. இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பாா்த்தவா்கள் நாங்கள். இதையும் எதிா்கொண்டு வெற்றிபெறுவோம் எனப் பதிவிட்டுள்ளாா் மு.க.ஸ்டாலின்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.