பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

தமிழர் அல்லாதவருக்கு தமிழக அரசில் உயர் பதவி... யார் இந்த கே. வெங்கட நாராயணா?

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கே. வெங்கட நாராயணா யார் என்பதைப் பற்றி...

News image

முதல்வர் விஜய்யுடன் கே. வெங்கட நாராயணா.

Updated On :26 ஜூன் 2026, 8:26 pm IST

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கே. வெங்கட நாராயணா யார்? என்பது குறித்த ஆர்வம் பொதுமக்களிடையே மேலோங்கியிருக்கிறது.

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதாக தலைமைச் செயலர் சாய்குமார் அதிகாரப்பூர்வமாக வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

நடிகரும் முதல்வருமான விஜய்யின் கடைசிப் படமான 'ஜன நாயகன்' படத்தை கர்நாடகத்தைச் சேர்ந்த கே.வி.என் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கே. வெங்கட நாராயணா யார்? என்பது குறித்தும், தமிழர் அல்லாதவருக்கு தமிழக அரசில் என்ன பணி குறித்த சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்திருக்கின்றன.

யார் இந்த கே. வெங்கட நாராயணா?

முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தை கே.வி.என்.ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் கே. வெங்கட நாராயணா, விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் கௌரவ வேடத்திலும் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரெஸ்டீஜ் குழுமம் எனும் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாகவும், 2017-ல் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றிய கே. வெங்கட நாராயணா, அந்த அனுபவத்தை வைத்து இவர் 2020 ஆம் ஆண்டில் கே.வி.என் புரோடக்‌ஷன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.

ரியல் எஸ்டேட் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் வெங்கட் கே.நாராயணா, விஜய், சிரஞ்சீவி, அக்‌ஷய்குமார், யஷ் ஆகியரை வைத்து படங்களைத் தயாரித்துள்ளார்.

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்த கே. வெங்கட் நாராயணா, ஆர்ஆர்ஆர் (RRR), சீதாராமம், அனிமல், தேவரா, கல்கி 2898 ஏடி மற்றும் டாக்ஸிக் தி ஃபேரி டேல் போன்ற முக்கிய படங்களையும் தயாரித்துள்ளார். மேலும், விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் படத்தையும் தயாரித்திருக்கிறார்.

பெங்களூருவில் சட்டப்படிப்பு முடித்துள்ள கே. வெங்கட நாராயணா, தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இவருக்கு தமிழ்மொழி எழுதவோ, படிக்கவோ பெரிதாக தெரியாது என்றும் கூறப்படுகிறது.

அரசு வெளியிட்டுள்ள அரசாரணையில், சென்னை கோட்டூபுரம் பகுதியின் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளதால், அவர் சென்னையில் தங்கியிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேக்கேதாட்டு விவகாரத்தில் கர்நாடகத்துடன் தமிழ்நாட்டுக்கும் இடையே மோதல்போக்கு நீடித்துவரும் சூழலில் கர்நாடகத்தைச் சேர்ந்தவருக்கு, அதுவும் குறிப்பாக தமிழர் அல்லாத, தமிழ் மொழிகூட தெரியாத ஒருவருக்கு, அமைச்சருக்கு இணையான தில்லியின் சிறப்பு பிரதிநிதி பதவியை முதல்வர் விஜய் வழங்கியிருப்பதற்கு அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

Summary

Tamil Nadu has appointed K Venkata Narayana as its Special Representative in New Delhi for one year. The move has drawn opposition criticism over his film industry background and proximity to C Joseph Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.