ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குழந்தைத் தொழிலாளர்களா? திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!

திருவள்ளூர் அமோனியா வாயு கசிவில் 2 சிறுமிகள் பலியானதைப் பற்றி...

Emergency Care Unit.

அவசர சிகிச்சைப் பிரிவு.

Published On :24 ஜூன் 2026, 9:08 am IST

திருவள்ளூர் அமோனியா வாயு கசிவில் பலியானோரில் 2 சிறுமிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள இறால் உள்ளிட்ட கடல் மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அமோனியா வாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக மூச்சுத்திணறல் மற்றும் காயத்தால் வடமாநிலத் தொழிலாளர்கள் 65-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் உடனடியாக திருவள்ளூர் மஞ்சங்காரணை தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 2 பெண்கள் பலியாகினர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் 17 பேர் கவலைக்கிடமான நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த கீதா ஆஸ்தா (24), ஒடிசாவைச் சேர்ந்த சபினி(22) ஆகிய இருவரும் திங்கள்கிழமை பலியாகினர்.

இதேபோல, மஞ்சங்காரணை தனியார் மருத்துவமனையில் ஒடிஸாவை சேர்ந்த பூர்ணிமா, திலோமினி, பராத்தி ஜிங்கா(19), சிகிச்சை பெற்று வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சிலா சுரின்(26) என்பவர் நேற்று பலியானார். இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தில் பலியானோர் அனைவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில், இருவர் 15 வயதான சிறுமிகள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக தனியார் கடல் உணவு ஏற்றுமதி தொழிற்சாலை உரிமையாளர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மோகன், அவரது சகோதரர் ஜெகன், மேலாளர் டேனியல் ஆகியோரை பெரியபாளையம் போலீஸார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனாரா? என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

Two girls have been identified among the victims of the ammonia gas leak in Tiruvallur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.