ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது பற்றி...

TN Legislative Assembly

சட்டப்பேரவை - DIPR

Published On :23 ஜூன் 2026, 11:50 am IST

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 18 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது ஜூன் 19, 22 ஆகிய இரு நாள்கள் விவாதம் நடைபெற்றது.

பின்னர், இன்று பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் விஜய் பதிலளித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு, மின் வெட்டு, போதைப்பொருள் புழக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்துப் பேசிய முதல்வர், இவை அனைத்திற்கும் கடந்த திமுக அரசுதான் காரணம் என்றும் 10 மாதங்களாக தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை, தவெக அரசு தான் டிஜிபியை நியமித்தது என்றும் திமுக அரசை முதல்வர் கடுமையாக விமர்சித்தார்.

மேலும் டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் வசூலித்தனர் என்றும் முதல்வர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் அமளியில் ஈடுபட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து தவெக அரசில் இந்த 40 நாள்களில் செய்தவற்றை பட்டியலிட்டும் பேசினார். முதல்வர் பேசிய பிறகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.

Summary

TN Legislative Assembly adjourned sine die

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.