தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், சமூகச் சேவகருமான எஸ்.கே.எம். மயிலானந்தனுக்கு பத்ம பூஷண் விருது வழங்கி இன்று (ஜூன் 23) கெளரவிக்கப்பட்டது.
தில்லியில் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (ஜூன் 23) வழங்கினார்.
2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பில் 131 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 13 பேருக்கு பத்ம பூஷண், 5 பேருக்கு பத்ம விபூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படவுள்ளன.
முதல் கட்டமாக மே 25 ஆம் தேதி பத்ம விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம், சமூகநலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டவா்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
பத்ம விருது பெற்ற தமிழர்கள்
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், சமூகச் சேவகருமான எஸ்.கே.எம். மயிலானந்தன் குடியரசுத் தலைவரிடம் பத்ம பூஷண் விருது பெற்றார்.
இந்திய டென்னிஸ் முகவரியாகத் திகழும், தமிழகத்தைச் சேர்ந்த விஜய் அமிர்தராஜ் பத்ம பூஷண் விருது பெற்றார்.

பத்ம பூஷண் விருது பெற்ற விஜய் அமிர்தராஜ்
கால்நடை அறிவியல் மற்றும் மருந்தியல் துறைக்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன் பத்ம ஸ்ரீ விருது பெற்றார்.

குடியரசுத் தலைவரிடம் பத்ம ஸ்ரீ விருது பெறும் புண்ணியமூர்த்தி
வேளாண்மை உயிரித்திரள் பாதுகாப்பு மற்றும் இந்தியாவில் காற்றில்லா நுண்ணுயிரியலை நிலைநிறுத்துதல் ஆகியவற்றில் ஆற்றிய பங்களிப்பிற்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் கே. ராமசாமிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

குடியரசுத் தலைவரிடம் பத்ம ஸ்ரீ விருது பெறும் கே. ராமசாமி
தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைத்துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக புகழ்பெற்ற வெண்கலச் சிற்பக் கலைஞர் டாக்டர் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
கலைத்துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் பாராட்டி, நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

குடியரசுத் தலைவரிடம் பத்ம ஸ்ரீ விருது பெறும் மாதவன்
கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

பத்ம ஸ்ரீ விருத பெறும் காமகோடி
தஞ்சாவூர் வாசிப்பு பாணிக்குத் பெயர் பெற்ற புகழ்பெற்ற மிருதங்க வித்வானும், கர்நாடக பக்கவாத்திய இசையின் மிகச்சிறந்த கலைஞர்களில் ஒருவருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாரூர் பக்தவத்சலத்திற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

பத்ம ஸ்ரீ பெறும் திருவாரூர் பக்தவத்சலம்
கலை மற்றும் இந்திய பாரம்பரிய இசைத் துறைக்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, கர்நாடக இசைப் பாடகிகளான தமிழ்நாட்டைச் சேர்ந்த ரஞ்சனி மற்றும் காயத்ரி பாலசுப்பிரமணியனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

பத்ம ஸ்ரீ பெறும் காயத்ரி, ரஞ்சனி
Summary
PadmaAwards2026 Padma Bhushan for industrialist S.K.M Mayilanandan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் மம்மூட்டி!
மக்களுக்கு தெரிந்தவா்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட பத்ம விருதுகளின் காலம் இப்போது மாறியிருக்கிறது: வி.ராமசுப்பிரமணியன்

பத்ம விருதுகள் 2026 - புகைப்படங்கள்

பத்ம ஸ்ரீ பெற்றுக்கொண்ட எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி! - முழுப் பட்டியல்
விடியோக்கள்
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu





