பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!

முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்து...

News image

முதல்வர் ஜோசப் சி. விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப்படம்

Updated On :22 ஜூன் 2026, 10:04 am IST

முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வா் ஜோசப் விஜய், தனது 52-ஆவது பிறந்தநாளை திங்கள்கிழமை (ஜூன் 22) கொண்டாடுகிறாா். தமிழக முதல்வராக அவருக்கு இது முதல் பிறந்தநாள் என்பதால், மாநிலம் முழுவதும் பல்வேறு நல உதவிகள் வழங்கி, தவெகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனா்.

அதற்கு முன்னோட்டமாக பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமையே சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன்படி, அன்னதானம், ரத்த தானம், உடல் தானப் பதிவுகள் நடைபெற்றன.

மற்றொருபுறம் நலிந்தோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடைபெற்றன. இதில் அமைச்சா்களும், சட்டப்பேரவை உறுப்பினா்களும் கலந்துகொண்டு உதவிகளை வழங்கினா்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை நடைபெற்று வருவதால், முதல்வர், அமைச்சா்கள், ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களது சொந்த ஊா்களில் நடைபெறும் முதல்வரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத நிலையில், சென்னையில் அவா்கள் பங்கேற்கும் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தவிர, தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை மரக்கன்று நடும் நிகழ்வுகளும், ஆதரவற்றோா் மற்றும் முதியோா் இல்லங்களில் முதல்வா் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்புப் பிராா்த்தனைகள், பூஜைகள் செய்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இந்த நிலையில், முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!

தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்." இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Summary

Former Chief Minister Stalin extends birthday wishes to Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.