மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பாராட்டுக்குரியது என்று மாநிலங்களவை எம்.பி.யும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட தன்னிச்சையாக முனையும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதல்வர், தம்பி விஜய் அவர்கள் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேக்கேதாட்டு விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Rajya Sabha MP and Makkal Needhi Maiam leader Kamal Haasan stated on Friday (June 19) that the passing of a special resolution in the Tamil Nadu Legislative Assembly against the Mekedatu dam is praiseworthy.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தீா்மானம்: அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்பு







