தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் விஜய் அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வெள்ளிக்கிழமை (ஜூன் 19) பேசியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சிக்கு எதிரான தனது முதல் தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் இன்று காலை முன்மொழிந்தார். இதற்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்ததால், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே, மேக்கேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியை டி.கே.சிவக்குமார் தலைமையிலான காங்கிரஸ் அரசு மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய்தான் கேள்வி கேட்க வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அவர்கள் இடம் கொடுத்துள்ளனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசாங்கம் உள்ளது. தமிழ் மக்களுக்கு விரோதமான செயலை காங்கிரஸ் அரசு எப்போதும் செய்துகொண்டேதான் இருக்கின்றது.
அது மாநில அரசாக இருந்தாலும் சரி. 12 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசாக இருந்தபோதிலும் சரி. காங்கிரஸ், எப்போதும் தமிழக மக்களுக்கு துரோகம் விளைவித்த கட்சியாகத்தான் உள்ளது.
இவ்வாறு துரோகம் இழைத்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் முதல்வர் விஜய் இடம் கொடுத்துள்ளார். ஆகவே, இவருக்கும் தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை இந்த செயல் எடுத்துக் காட்டுகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
Summary
BJP State President Nainar Nagendran stated on Friday (June 19) that Tamil Nadu Chief Minister Vijay has given a place in his cabinet to the Congress party, which betrayed the people of Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்க்கு நிர்வாக அனுபவம் இல்லை: நயினார் நாகேந்திரன்

48 மணி நேரத்தில் 20 பாலியல் வன்கொடுமைகள்: முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மாரிதாஸ் கைது: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
கட்சி தொடங்குவது ஜனநாயக உரிமை: நயினாா் நாகேந்திரன்
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46




