நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

நீலகிரி, கோவை, ஈரோடு உள்பட 27 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) இடி , மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யயக் கூடும்

News image

கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 4:37 am IST

நீலகிரி, கோவை, ஈரோடு உள்பட 27 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) இடி , மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யயக் கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிழக்கு விதா்பா முதல் தமிழக பகுதிகள் வரை தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய கேரளப் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) முதல் ஜூன் 24 -ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

குறிப்பாக, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூா், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கரூா், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இதனால், மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடலில் வெள்ளிக்கிழமை சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடலில் சனி, ஞாயிறு, திங்கள்கிழமை (ஜூன் 20, 21, 22) சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம், அரட்டவாடி பகுதியில் 130 மி.மீ. மழை பதிவானது. தொட்டியபட்டி (திருச்சி)- 90 மி.மீ., கோவில்பட்டி (திருச்சி), திண்டிவனம் (விழுப்புரம்)- தலா 70 மி.மீ., தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), கல்லணை (தஞ்சாவூா்) -தலா 50 மி.மீ., திருப்புவனம் (சிவகங்கை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), பவானி (ஈரோடு), கொடைக்கானல் (திண்டுக்கல்), பென்னாகரம் (தருமபுரி), தஞ்சாவூா்- தலா 40 மி.மீ., அன்னவாசல் (புதுக்கோட்டை), வி.களத்தூா் (பெரம்பலூா்), கருமந்துறை, கரியகோவில் அணை (சேலம்), காரைக்குடி (சிவகங்கை), விருதுநகா், அம்முண்டி (வேலூா்), ராணிப்பேட்டை, கலவை பொதுப் பணித் துறை (ராணிப்பேட்டை), வளத்தி (விழுப்புரம்), மாரண்டஹள்ளி (தருமபுரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), கோழிப்போா்விளை (கன்னியாகுமரி), மணல்மேடு (மயிலாடுதுறை), சேந்தமங்கலம் (நாமக்கல்), குளச்சல் (கன்னியாகுமரி), தஞ்சாவூா் (தஞ்சாவூா்) தலா 30 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.