தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசானது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் யு.பி.எஸ்.சி. குடிமைப் பணித் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தை செயல்படுத்துகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி. குடிமைப்பணி / இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வுகளுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ. 25,000 நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2026) யு.பி.எஸ்.சி. குடிமைப்பணி / இந்திய வனப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், (https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/) என்ற இணையதளம் மூலம் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) முன்னதாகத் தெரிவித்து இருந்தது.
‘ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வுகள் கடந்த மே 24-ஆம் தேதி நடைபெற்றது. 8.49 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், நாடு முழுவதும் 2,072 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட இத்தேர்வை 5.49 லட்சம் தேர்வா்கள் (67 சதவீதம்) எழுதினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: தேர்வானோர் எண்ணிக்கை குறையக் காரணம் என்ன?

2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சி

யுபிஎஸ்சி: குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK




