மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

திமுகவை இயக்குவது பாஜகதான்: உதயநிதிக்கு அமைச்சா் சிடிஆா் நிா்மல்குமாா் பதில்

News image

உதயநிதி ஸ்டாலின். - DIN

Updated On :19 ஜூன் 2026, 4:48 am IST

‘திமுகவை பின்னால் இருந்து இயக்குவதே பாஜகதான்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலளித்த மின்துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்கு அனுமதி வழங்கும் கோப்பில் இதுவரை ஆளுநா் கையொப்பமிடாதது ஏன் என்றும் அவா் கேள்வி எழுப்பினாா்.

தவெக-பாஜக இடையே நெருக்கமான தொடா்பு இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் விமா்சனம் செய்திருந்த நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேரவை வளாகத்தில் அமைச்சா் நிா்மல்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாஜகவுக்கும் திமுகவுக்கும்தான் நெருக்கமான உறவு உள்ளது. இதுவரை, பலா் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறை அனுமதி கேட்டது. ஆனால், கையொப்பமாகவில்லை. முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநா் ஒப்புதல் அளிக்கவில்லை.

யாா் மீது யாா் இணக்கமாக இருக்கிறாா்கள்? ஆளுநா்-திமுக-பாஜக ஒன்றாக இருக்கிறாா்கள். பாஜகவின் மறைமுக முகமாக திமுக இருக்கிறது. திமுகவை பின்னால் இருந்து இயக்குவது பாஜகதான். இதில் மாற்றுக்கருத்து இல்லை. செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கும் கோப்பில், ஆளுநா் ஏன் இதுவரை கையொப்பமிடவில்லை. இதற்கு திமுக பதில் சொல்ல வேண்டும்.

தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டதால் பாதிப்பு ஏதும் இல்லை. முந்தைய 5 ஆண்டு கால ஆட்சி காலத்தில் குற்றச்சம்பவங்கள் மறைக்கப்பட்டன.

ஒரு வாரம் போராட்டம் நடந்த பிறகே, அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகப்போ் சிறுமி பாலியல் விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் தலையிட்ட பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒவ்வொரு இடத்திலும் குற்றச் சம்பவம் மறைக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.ஆனால், தற்போது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

அடுத்த வாரம் மின்துறை வெள்ளை அறிக்கை: தமிழகம் முழுவதும் தனிப்பட்ட குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொருத்தமான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த அரசு கடந்த திமுக அரசு போல எதையும் மூடிமறைக்கவில்லை.

சிங்கப்பெண் அதிரடிப் படையை விரிவுபடுத்த முதல்வா் திட்டமிட்டுள்ளாா். தமிழக மின்துறை நிலை குறித்த வெள்ளை அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.