சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாமை முதல்வர் சி. ஜோசப் விஜய், இன்று(ஜூன் 16) குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.
17-ஆவது சட்டப்பேரவைக்குத் தேர்வான அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இருநாள் பயிற்சி முகாம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் வரும் இன்றும் நாளையும் காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.
இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் கடைப்பிடிக்க வேண்டிய மாண்புகள், நடைமுறைகள், விதிகள் குறித்து அரசுத் துறைச் செயலர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பேரவையில் எதைப் பேசுவதற்கு அனுமதி உள்ளது, எதையெல்லாம் பேசக் கூடாது, கேள்விகள் எழுப்புவதற்கான நடைமுறைகள் என்ன என்பதை பற்றிய முழுப் பயிற்சிகளும் அவர்களுக்கு அளிக்கப்படும். இதில், அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர்கள், மூத்த உறுப்பினர்கள் விருப்பப்பட்டால் பயிற்சியில் பங்கேற்கலாம். அவர்கள் பயிற்சியில் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். முதல் கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர், சட்டப்பேரவைக் குழுக்கள் அமைக்கப்படும் என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பேரவைக்குப் புதியவர்கள் என்பதால் இந்த பயிற்சி அவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Chief Minister C. Joseph Vijay inaugurated a two-day training camp for Members of the Legislative Assembly today (June 15) by lighting a traditional lamp.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து!

தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு

சென்னையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!

17-வது சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK




