சென்னை ஒன் செயலியின் மூலமாக ஒரு ரூபாய் டிக்கெட்டில் பேருந்து, ரயில், மெட்ரோ ஆகியவற்றில் ஒருமுறை மட்டும் பயணிக்கும் ஆஃபர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து மற்றும் எண்மப் பரிவா்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மாநகரப் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகா் ரயில்களில் பயணிக்கும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம்(CUMTA) சாா்பில் ‘சென்னை ஒன்’ என்ற செயலி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தச் செயலியில் ரூ. 1,000 மற்றும் ரூ. 2,000-க்கான சில்வா் மற்றும் கோல்டு ஆகிய மாதந்திர பயண அட்டைகளை இணைதளம் மூலமாகவே பெறும் வசதியும் நடைமுறையில் இருந்து வருகிறது. சென்னை ஒன் செயலியை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ஒன் செயலியில் ஒரு ரூபாய் டிக்கெட்டில் பேருந்து, ரயில், மெட்ரோ ஆகியவற்றில் ஒரு முறை மட்டும் பயணிக்கும் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ரூபாய் டிக்கெட் பெறுவது எப்படி?
சென்னை ஒன் செயலியில் உங்கள் பயணத்தைத் தேர்ந்தெடுத்து, கட்டணம் செலுத்தும் பகுதிக்குச் செல்லவும்.
கட்டணம் செலுத்தும் பக்கத்தில் உள்ள ரூ. 1 டிக்கெட் சலுகையை (Rs 1 Ticket Offer) தேர்ந்தெடுக்கவும்.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின் (CUMTA) யுபிஐ அமைப்பை நிறைவு செய்து, ரூ. 1 மட்டும் செலுத்தினால் நீங்கள் பயணிக்கலாம்.
அதுமட்டுமல்ல, இந்த ரூ. 1 டிக்கெட் சலுகைக்குப் பிறகு, இந்த யுபிஐ -யைப் பயன்படுத்தி நீங்கள் வாங்கும் அடுத்த 6 டிக்கெட்டுகளுக்கும் 20% தள்ளுபடி பெறலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Here's how you can get your "Oru Rooba Ticket" on the Chennai One App. ð
— Chennai One (@Chennai_One) June 16, 2026
ð Select your journey and proceed to payment
ð Tap the â¹1 Ticket Offer on the payment page
ð Complete your CUMTA UPI setup and Pay just â¹1 and you're ready to travel!
And that's not all. After⦠pic.twitter.com/IQ7k1MymPN
Summary
Travel by bus, train, or metro for just one rupee: Chennai One app offer
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் குதித்த பயணி! சேவை பாதிப்பு!

20.6.1976: சென்னை சுரங்க ரயில் திட்டம் இப்போதில்லை?

விஸ்வரூபம் எடுக்கப்போகும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம்!

11.6.1976: சென்னை - திருவள்ளூர் மின்சார ரயில் திட்டம் 1980ல் முடிவுறும்
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan





