தமிழ்நாட்டிற்கான வரி வருவாய் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (ஜூன் 16) வெள்ளை அறிக்கை வெளியிட்டுத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார். வெள்ளை அறிக்கை வெளியிட்டு அது குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.
வெள்ளை அறிக்கை வெளியிட்டு அமைச்சர் பேசியதாவது:
''சொந்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு வட்டிக்காக மட்டுமே செலவாகிறது. வட்டிச் செலவு மட்டும் ரூ. 67,050 கோடியாக உள்ளது. மூலதன செலவு மட்டும் ரூ. 50911 கோடியாக உள்ளது.
மொத்த வருவாய் வரவுகளில் வட்டிச் செலவிலத்தின் சதவீதம் 22.8% ஆக உள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சொந்த வரி வருவாய் சதவீதம் 5.45% சரிந்துள்ளது.
தமிழகத்தில் பிறக்கும் ஒரு குழந்தை, இணை மாநிலங்களை விட அதிகமான கடன் சுமையுடன் பிறக்கிறது.
கனிம வளங்கள் இருந்தும் வருவாயில் பெரிதாக மாற்றம் இல்லை. 2021 - 2026-ல் 10% ஆக இருந்த கனிமவள வருவாய் 8.23% ஆக குறைந்துள்ளது.
5 ஆண்டில் ரூ.4.87 லட்சம் கோடி புதிய கடன்
இணை மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழக சரக்கு, சேவை வரி வளர்ச்சி விகிதம் குறைவாகவே உள்ளது. வணிக வரிகள் துறையில் நிலவும் அமைப்பு சார் ஊழல் காரணமாக கணிசமான இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
சந்தை நிலவரத்தை பின்பற்றும் வகையில் வழிகாட்டு மதிப்புகள் திருத்தப்படவில்லை.
கடந்த 5 ஆண்டில் ரூ. 4.87 லட்சம் கோடி புதிய கடன் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் கடன் சுமை இரு மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிக கடன் சுமை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ. 78,324 கோடியாக உள்ளது. மாநில மொத்த வருவாய் வரவுகளில் வட்டிச் செலவினத்தின் சதவீதம் 22.8% ஆக உள்ளது'' எனக் குறிப்பிட்டார்
Summary
Tamil Nadu's tax revenue sees unprecedented decline: Finance Minister mariya wilson
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்தின் மொத்த கடன் ரூ.13 லட்சம் கோடி: வெள்ளை அறிக்கை வெளியிட்டது அரசு

முதியோர் சமூகமாக மாறுகிறது தமிழ்நாடு! 71% முதியோர்களே!

விரைவில் நிதிநிலை வெள்ளை அறிக்கை: அமைச்சா் மரியவில்சன்

தமிழக நிதிநிலைமை குறித்து 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை! நிதியமைச்சா் மரிய வில்சன் பேட்டி
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



