இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு இசைஞானி இளையராஜா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்த பாரதிராஜா, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இயக்குநர் பாரதிராஜா சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இன்று(ஜூன் 10) அதிகாலை காலமானார்.
திரையுலகப் பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் ரசிகர்களும் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர்.
முதல்வர் ஜோசப் விஜய் இன்று காலையிலேயே வந்து பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பல்வேறு பிரபலங்களைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவும் நேரில் சென்று பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசுகையில், "பாரதிராஜாவின் ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன். உங்களுடன் இருக்கும் உறவுதான் அவருடனும் எனக்கு இருந்தது. இரண்டும் வேறுவேறு அல்ல. இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் கலைஞர்களையும் நேசிப்பதுதான் என்னுடைய பிறப்பு" என்று கூறினார்.
Summary
Ilaiyaraaja pays tribute to Bharathiraja
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை

பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி!

பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


