இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!

முதல்வர் ஜோசப் விஜய்யின் தில்லி பயணம் பற்றி...

News image

முதல்வர் ஜோசப் விஜய் (கோப்புப்படம்) - ANI

Updated On :9 ஜூன் 2026, 11:24 am IST

தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் புதன்கிழமை மீண்டும் தில்லி செல்லவுள்ளார்.

முதல்வரான பிறகு முதல்முறையாக கடந்த மே 27-ஆம் தேதி முதல்வா் ஜோசப் விஜய் தில்லி சென்று பிரதமா் மோடியை சந்தித்தாா். அப்போது, கா்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டு அணை திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்றும், தமிழக மீனவா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

இந்த பயணத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களை விஜய் நேரில் சந்திப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அவர்கள் யாரையும் சந்திக்காமல் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், மாநில முன்னேற்றத்துக்குத் தேவையான வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு குறித்து அனைத்து மாநில முதல்வா்களுடன் தில்லியில் வரும் 11-ஆம் தேதி நீதி ஆயோக் கூட்டம் பிரதமா் மோடி தலைமையில் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க முதல்வா் ஜோசப் விஜய் புதன்கிழமை தில்லி புறப்பட்டுச் செல்கிறார்.

வெள்ளிக்கிழமை வரை தில்லியில் முகாமிடும் முதல்வர் விஜய், உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்திப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.