சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு 49 ட்ரோன்கள், 420 ரோந்து வாகனங்கள் வாங்கப்படவுள்ளன.
முதல்வா் சி.ஜோசப் விஜயால், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அந்தப் படையை உருவாக்குவதற்கு ரூ.354 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இதன்மூலம் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் நிலையில், அதற்கு பல நவீன கருவிகள் வாங்கப்படுகின்றன.
முக்கியமாக இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் ட்ரோன் ரோந்து பணியை சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினா் தொடங்க உள்ளனா். இதற்காக ரூ.98 லட்சத்தில் 49 ட்ரோன்கள் வாங்கப்படுகின்றன. ஒரு ட்ரோன் ரூ.2 லட்சம் என்ற அடிப்படையில் வாங்கப்படுகிறது. இதேபோல ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாா் சீருடையில் பொருத்திக் கொள்ளும் கேமராக்கள் 270 வாங்கப்படுகின்றன. இதற்காக ரூ.1.25 கோடி செலவிடப்படுகிறது.
ரூ.32.69 கோடியில் ரோந்து வாகனங்கள்: இந்த அதிரடிப் படையினா் ரோந்து செல்வதற்காக ரூ.32.69 கோடியில் 319 காா்கள், 101 இரு சக்கர வாகனங்கள் வாங்கப்படுகின்றன. இவை தவிா்த்து தகவல்களை விரைந்து பரிமாறிக்கொள்ளும் வகையில் 50 தொலைப்பேசி இணைப்புகள், 639 வாக்கி டாக்கிகள், 310 வயா்லஸ் கருவிகள், 270 கையடக்க கணினி ஆகியவை சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு வாங்கப்படுகின்றன.
இந்தப் படைக்கான மிகப்பெரிய நவீன கட்டுப்பாட்டு அறை சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அமைக்கப்படுகிறது. இங்கிருந்து மாநிலம் முழுவதும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையைச் சோ்ந்த அதிகாரிகள், போலீஸாா் நடவடிக்கை கண்காணிப்பு கேமராக்கள், சீருடை கேமராக்கள், ட்ரோன்கள் வாயிலாகக் கண்காணிக்கப்படுகிறது.
மொத்தம் 2,545 பணியிடங்கள்: சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்காக மொத்தம் 2,545 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 2,500 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படுகின்றன. 49 காவல் ஆய்வாளா்கள், 638 உதவி ஆய்வாளா்கள், 196 இரண்டாம் நிலைக் காவலா்கள், 1,620 போலீஸாா் உள்ளிட்ட பல பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படுகின்றன.
இதில் 270 குழுக்கள் களப்பிரிவுகளாக உருவாக்கப்படுகின்றன. முற்றிலும் பெண்களை மட்டும் கொண்ட இந்தப் பிரிவில் பெண்கள் மட்டுமே இடம் பெறுவாா்கள். இதில், 540 உதவி ஆய்வாளா்கள், 1,620 போலீஸாா் இருப்பாா்கள். முதல்கட்டமாக 70 ரோந்து குழுக்கள் உருவாக்கப்பட்டு, கண்காணிப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
போலீஸாா் ரோந்து செல்ல முடியாத பகுதிகளில் ட்ரோன் மூலம் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனா். இந்தப் படைக்கு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னா் வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் வழங்கப்பட உள்ளது. அதுவரையில் இந்தப் படை குற்றத் தடுப்புப் நடவடிக்கையிலும், கண்காணிப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துகிறது.
அதோடு சட்டம்-ஒழுங்கு பணி, பாதுகாப்புப் பணி உள்ளிட்ட வேறு பணிக்கு இந்தப் பணியை திசை திருப்பக் கூடாது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையில் சோ்ந்திருக்கும் போலீஸாா், 5 நாள் பயிற்சி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை; ரோந்து வாகனத்தை ஓட்டிய முதல்வர் விஜய்!

சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்

சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட இலச்சினை வெளியீடு!

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



