எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூன் 8 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள்.

இன்றைய செய்திகள் ஜூன் 8 - நேரலை!

முதல்வர் விஜய்யுடன் செஸ் சாம்பியன் ஆர். பிரக்ஞானந்தா.

4:05 am, 8 ஜூன் 2026

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டடங்கள் சேதம்

பிலிப்பின்ஸில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில், ஒருவர் பலியானதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

4:07 am, 8 ஜூன் 2026

டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!

டொமினிகன் குடியரசில் தனியார் விமானம் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறியதில் விமானி உள்பட இரண்டு பேர் பலியாகினர்.

4:51 am, 8 ஜூன் 2026

தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது?

வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

5:56 am, 8 ஜூன் 2026

சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ‘ஹாா்டு டிஸ்க்’குகள் (தரவு சேமிப்பு சாதனங்கள்) திருடப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி திங்கள்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

6:00 am, 8 ஜூன் 2026

தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! யார் வைத்தது?

தலைநகர் புது தில்லியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள் வைக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. இந்த பேனர்களை யார் வைத்திருப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

6:05 am, 8 ஜூன் 2026

அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவுப் பொட்டலத்தில் இறந்து கிடந்த பாம்பு!

போபால்: மத்திய பிரதேசம் மாநிலத்தில் அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவுப் பொட்டலத்தில் இறந்த குட்டிப் பாம்பு ஒன்று கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6:05 am, 8 ஜூன் 2026

காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சூரஜ் எம். என். ஹெக்டே காலமானார்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், கர்நாடக மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான சூரஜ் எம். என். ஹெக்டே(55) திடீர் மாரடைப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 7) இரவு காலமானார்.

6:17 am, 8 ஜூன் 2026

சுருண்டது ஆப்கானிஸ்தான்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

6:51 am, 8 ஜூன் 2026

யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது

தவெகவினர் அளித்த புகார்களைத் தொடர்ந்து யூடியூபர் மாரிதாஸ் அவரது மதுரை வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

6:52 am, 8 ஜூன் 2026

இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது

தில்லியில் எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

தமிழ்நாட்டில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

7:03 am, 8 ஜூன் 2026

பூமியை நோக்கி சூரிய துகள்கள்! தென் மாநிலங்கள் மீது விழுமா?

சூரியனில் நிகழ்ந்த ஒரு மாபெரும் சூரிய வெடிப்புக் காரணமாக வௌயின சூரிய துகள்கள் அல்லது நெருப்புத் துகள்கள் மிக வேகமாக பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.

7:11 am, 8 ஜூன் 2026

திரிணமூல் மூத்த தலைவர் ராஜிநாமா

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுகேந்து சேகர் ராய் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.

7:21 am, 8 ஜூன் 2026

தமிழ்நாடு முழுவதும் டி-சேவா மையங்கள் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு முழுவதிலும் டி-சேவா மையங்கள் தொடங்குவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

8:10 am, 8 ஜூன் 2026

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் தாயார் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் தாயாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

10:30 am, 8 ஜூன் 2026

எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள காங்கிரஸ் நிர்வாகி பிரவீண் சக்ரவர்த்தி போட்டியின்றி தேர்வாகவுள்ளார்.

10:31 am, 8 ஜூன் 2026

கார்கே பேட்டி

இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

11:21 am, 8 ஜூன் 2026

தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய சீரியல் நடிகை பரமேஸ்வரி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மனசெல்லாம் தொடரின் நாயகி பரமேஸ்வரி ரெட்டி, தெலுங்கு சுயாதீன பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

அவர் நடனமாடிய பாடலின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது. இஸ்லாமிய குடும்பத்தின் பின்னணியில் மலரும் காதல் குறித்து இந்தப் பாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

11:22 am, 8 ஜூன் 2026

மின் துறைக்கு 7000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!

மின்சாரத் துறைக்கு மொத்தம் 7 ஆயிரம் பணியாளர்கள் தேவை என்றும், 1500 பேர் உடனடியாக பணியமர்த்தப்படவுள்ளதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார் இன்று (ஜூன் 8) தெரிவித்தார்.

மின்துறையில் தாமதமின்றி பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும், நிலுவையில் உள்ளவர்களும் விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

11:22 am, 8 ஜூன் 2026

நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ குளறுபடி விவகாரங்களில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஜூன் 8) வலியுறுத்தினார்.

11:25 am, 8 ஜூன் 2026

வானிலை ஆய்வு மையம் சொன்ன நல்ல செய்தி!

தமிழ்நாட்டில் ஜூன் 10-க்குப் பின் வெய்யில் படிப்படியாகக் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12:00 pm, 8 ஜூன் 2026

ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

12:25 pm, 8 ஜூன் 2026

பிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!

12:28 pm, 8 ஜூன் 2026

நீட் மறுதேர்வு: விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் வினாத்தாள்கள்!

நீட் மறுதேர்வுக்காகத் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் என்று தேசிய தேர்வு முகமையின் இயக்குநர் அபிஷேக் சிங் தெரிவித்துள்ளார்.

1:00 pm, 8 ஜூன் 2026

இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்களோ எதிரிகளோ அல்ல: சீன அரசு

1:48 pm, 8 ஜூன் 2026

எம்.எல்.ஏ., எம்.பி.யை வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ்

பாஜகவால் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை வாங்கலாம், ஆனால் மக்களை வாங்க முடியாது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (ஜூன் 8) தெரிவித்தார்.

1:48 pm, 8 ஜூன் 2026

என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலை

புதிதாக தொடங்கியுள்ள இயக்கத்தில் யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

2:37 pm, 8 ஜூன் 2026

திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் தில்லியில் ஆலோசனை!

4:36 pm, 8 ஜூன் 2026

மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவு

அனைத்து மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 8) உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த முதல்வர் விஜய் தலைமையில் இன்று (ஜூன் 8) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

4:37 pm, 8 ஜூன் 2026

சன் ஆஃப் தஞ்சை: முதல்முறை தமிழில் உருவான விடியோ கேம்!

முழுக்க தமிழ் நிலத்தை மையப்படுத்தி புதிய விடியோ கேம் உருவாக்கப்பட்டுள்ளது.

சன் ஆஃப் தஞ்சை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விடியோ கேமுக்கான கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை பாடலாசிரியரும் மென்பொறியாளருமான மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

சென்னையை மையமாக கொண்ட ஸ்டூடியோவான அயலெட் ஸ்டூடியோஸால் உருவாக்கப்பட்ட சன் ஆஃப் தஞ்சை விளையாட்டு எக்ஸ் பாக்ஸ் எக்ஸ், பிஎஸ் 5 ஆகிய தளங்களில் வெளியாகவுள்ளது.

4:49 pm, 8 ஜூன் 2026

இந்தியா கூட்டணி ஆலோசனையில் கரப்பான் பூச்சி கட்சி பற்றிய விவாதம்! என்ன நடந்தது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.