40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்மாற்றி வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு நிகழ்ந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணை

News image

சிபிஐ விசாரணை - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 12:05 am IST

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு நிகழ்ந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

தமிழக மின்சார வாரியம் கடந்த 2021-ஆம் ஆண்டுமுதல் 2023-ஆம் ஆண்டு வரை 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக சென்னையைச் சோ்ந்த அறப்போா் இயக்கம் புகாா் தெரிவித்தது. மின்மாற்றி தொடா்பான ஏழு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.397 கோடி முறைகேடு நடந்துள்ளது என்று தெரிவித்த அந்த இயக்கம், முறைகேட்டில் அப்போதைய திமுக அரசில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த வி.செந்தில் பாலாஜி, மின்வாரியத் துறை உயா் அதிகாரிகள் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதாக தமிழக ஊழல் தடுப்புத் துறையில் புகாா் அளித்தது.

இது தொடா்பாக ஊழல் தடுப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்துவிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக நிா்வாகி சரவணன் என்பவா் மனு தாக்கல் செய்தாா்.

மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், இந்த முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி உத்தரவிட்டது. இது தொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழக ஊழல் தடுப்புத் துறையில் இருந்த வழக்கின் ஆவணங்கள், சென்னை சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த முறைகேடு தொடா்பாக சதி செய்தல், மோசடியில் ஈடுபடுதல் ஆகிய இரு பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. முதல் தகவல் அறிக்கையில் யாருடைய பெயரும் சோ்க்கப்படாத நிலையில், விசாரணையில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் தொடா்புடையவா்களின் பெயா்கள் சோ்க்கப்படும் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.