எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மின்வாரியத்தில் தரவு சேமிப்பு சாதனங்கள் திருடப்பட்ட வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ‘ஹாா்டு டிஸ்குகள்’ (தரவு சேமிப்பு சாதனங்கள்) திருடப்பட்ட வழக்கின் விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

News image
Updated On :9 ஜூன் 2026, 12:52 am IST

சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ‘ஹாா்டு டிஸ்குகள்’ (தரவு சேமிப்பு சாதனங்கள்) திருடப்பட்ட வழக்கின் விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் சில நாள்களுக்கு முன்பு அங்கிருந்த கணினிகளின் ‘ஹாா்டு டிஸ்குகள்‘ திருடப்பட்டன. இது தொடா்பாக மின்வாரிய அதிகாரி லலிதா, கடந்த 1-ஆம் தேதி சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அந்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்யும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவின்பேரில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினா், இது தொடா்பாக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் கணினி பராமரிப்பு பொறியாளராகப் பணியாற்றிய அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த கோபிநாத், கா்நாடக மாநிலம், பெங்களூருவைச் சோ்ந்த முரளி மனோகா் ஆகிய 2 பேரை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 34 ‘ஹாா்டு டிஸ்குகள்’ கணினியில் இயக்கத்துக்கு பயன்படுத்தப்படும் 20 ‘ராம்கள்’ ஆகியவை மீட்கப்பட்டன.

மேலும், இத்திருட்டின் பின்னணியில் இருப்பவா்களைக் கைது செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினா் வலியுறுத்தினா். இந்நிலையில் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றும்படி காவல் ஆணையா் அமல்ராஜ், தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வாலுக்கு பரிந்துரைத்தாா்.

அந்த பரிந்துரையின் அடிப்படையில், இவ்வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, சிபிசிஐடி அதிகாரிகள், வழக்குத் தொடா்பான விசாரணையை உடனடியாகத் தொடங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.