40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்

சூலூரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய போலீஸார் திட்டமிட்டு உள்ளனர்.

News image

கோவை வழக்கு.

Updated On :7 ஜூன் 2026, 5:04 pm IST

சூலூரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய போலீஸார் திட்டமிட்டு உள்ளனர்.

கோவை, சூலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்தி (33), அவரது நண்பர் மோகன்ராஜ் (30) ஆகியோரை சூலூர் போலீஸார் கைது செய்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சக கைதிகள் தாக்கியதில் காயம் அடைந்த கார்த்தி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்களை விசாரிக்க கைதான இருவரையும் கடந்த 3-ஆம் தேதி போலீஸார் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கு இருவரையும் போலீஸார் நேரில் அழைத்துச் சென்று, அவர்களின் வாக்குமூலங்களை வீடியோவில் பதிவு செய்தனர். 3 நாள் காவல் விசாரணை முடிந்து நேற்று கார்த்தி, மோகன்ராஜ் ஆகிய இருவரையும் போலீஸார் மீண்டும் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இருவரையும் வரும் 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, மோகன்ராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கார்த்தி மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தயாரிப்புப் பணியை போலீஸார் தீவிரப்படுத்தி உள்ளனர். அடுத்த வாரம் குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் திட்டமிட்டு உள்ளனர்.

இவ்வழக்கு விசாரணையை விரைந்து முடித்து இருவருக்கும் அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தர போலீஸார் திட்டமிட்டு உள்ளனர்.

Summary

In the case of the murder of a minor girl near Coimbatore, the police plan to file a chargesheet in court next week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.