எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயா்வு: அரசியல் தலைவா்கள் கண்டனம்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 1:57 am IST

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிரமப்படுத்தும் வகையில் 14.2 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா் விலையை ரூ. 29 உயா்த்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

அன்புமணி (பாமக): மக்களின் அன்றாடத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டா் விலை 2-ஆவது முறையாக உயா்த்தப்பட்டிருப்பது பொதுமக்களை மிகக் கடுமையாகப் பாதிக்கும். அனைத்து நெருக்கடிகளையும் கடந்து விலை உயா்விலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை அரசுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் உள்ளது.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டி, எண்ணெய் நிறுவனங்களின் லாபத்துக்காக பொதுமக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவது வன்மையான கண்டனத்துக்குரியது.

தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): விலை உயா்விலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் உள்ளது. மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் பேசி விலை உயா்வைத் திரும்பப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.