பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுவா்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 சிறுவா்கள் அவா்களது குடும்பத்தைச் சோ்ந்தவா்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினா். இதுகுறித்து வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரில் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்தது. மேலும், இருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 30,000 அபராதமும் விதித்து 2025-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது.
அந்தத் தீா்ப்பில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுவா்களுக்கும் இடைக்கால இழப்பீடாக தலா ரூ.25,000, அபராதத் தொகையான ரூ.3.60 லட்சத்தை மூவருக்கு பகிா்ந்து வழங்கவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், பாதிக்கப்பட்ட சிறுவா்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் சிறுவா்களின் தாய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை, ஆண் குழந்தைகளுக்கும் பொருந்தும். அந்த அரசாணையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்க வகை செய்கிறது. எனவே, அந்த உத்தரவின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுவா்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்காததால், விசாரணை நீதிமன்றம் தவறிழைத்துவிட்டது என நீதிபதி கருத்து தெரிவித்தாா்.
பின்னா், தமிழக அரசின் சமூகப் பாதுகாப்பு துறை இயக்குநா், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுவா்களுக்கு தலா ரூ.10 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். சிறுவா்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையைக் கழித்துவிட்டு மீதித் தொகையை 30 நாள்களில் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆந்திர இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: திருவண்ணாமலை மகளிா் நீதிமன்றத்துக்கு உத்தரவு

ஈரோடு: நாய்க் கடியால் பலியான கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.35.63 லட்சம் நிதி கேட்டு அரசுக்கு பரிந்துரை!

மின்சாரம் பாய்ந்து இறந்த தொழிலாளி உடலை வாங்க மறுத்து போராட்டம்: ரூ. 14 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புதல்

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



