மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

இபிஎஸ் பற்றி பேச பல கட்சிகளில் இருந்த ஆதவ் அர்ஜுனாவுக்குத் தகுதி இல்லை: கே.பி. முனுசாமி

இபிஸ் பற்றி பேச பல கட்சிகளில் இருந்த ஆதவ் அர்ஜுனாவுக்குத் தகுதி இல்லை என்று அதிமுக துணைப் பொதுச்செயலர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

News image

கே.பி. முனுசாமி.

Updated On :6 ஜூன் 2026, 4:44 pm IST

இபிஸ் பற்றி பேச பல கட்சிகளில் இருந்த ஆதவ் அர்ஜுனாவுக்குத் தகுதி இல்லை என்று அதிமுக துணைப் பொதுச்செயலர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிருஷ்ணகிரியில் அவர் அளித்த பேட்டியில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பல்வேறு தவறான கருத்துகளைக் தான்தோன்றித்தனமாக பதிய வைத்திருக்கிறார். அவருக்கு என்னுடைய கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். நெல் மேல் குருவியைப் போல எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் சென்றவர் ஆதவ் அர்ஜுனா.

முதலில் திமுக, விசிக, அதிமுக என பல கட்சிகளுக்குச் சென்று இறுதியாக தவெகவில் இணைந்து அமைச்சராகியுள்ளார். அதிமுக தொண்டர்கள் வாக்களித்ததால்தான் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது என்று கூச்சமோ வெட்கமோ இல்லாமல் கூறுகிறார். இந்த போக்கை ஆதவ் அர்ஜுனா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில் அவருக்கு எதிராக நேரடியாக போராட்டத்தில் களமிறங்குவேன் என்பதை இறுதி எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன். அரசியல் நாகரிகம் என்று ஒன்று உள்ளது. தான்தோன்றித்தனமாக ஆதவ் அர்ஜுனா பேசக்கூடாது. அதிமுக பொதுச் செயலாளர் பற்றி பேச, பல கட்சிகளுக்குச் சென்று வந்த ஆதவ் அர்ஜுனாவுக்குத் தகுதி இல்லை.

அதிமுகவுக்கு துரோகம் புரிந்து சென்ற சந்தர்ப்பவாதிகளை வரவேற்பதோடு ஆதவ் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இன்று நடைபெற்ற தவெகவில் அதிமுகவினர் இணையும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமை குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருந்தார்.

Summary

AIADMK Deputy General Secretary K.P. Munusamy has stated that Aadhav Arjuna, who has moved through multiple parties, has no right to speak about EPS.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.