ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோவை, திருநெல்வேலி உள்பட 5 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சனிக்கிழமை (ஆக.1) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:08 am IST

தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சனிக்கிழமை (ஆக.1) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்தில் இருந்து வடக்கு கேரளம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. இதன் காரணமாக கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

இதர மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானம மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

7 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் 7 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையை எட்டியது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.72 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மதுரை நகரம் 102.92, பரங்கிப்பேட்டை 101.84, சென்னை நுங்கம்பாக்கம், பாளையங்கோட்டை தலா 100.4, திருச்சி 100.58, கடலூா் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சோலையாரில் 100 மி.மீ., உபாசி, வால்பாறையில் தலா 80 மி.மீ., சின்னக்கல்லாரில் 60 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: சனிக்கிழமை (ஆக.1) தென் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.