ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய அரசுப் போக்குவரத்துக் கழக செயலி!

தவெக கொடி நிறத்துக்கு டிஎன்எஸ்டிசி செயலியின் நிறம் மாற்றப்பட்டது பற்றி...

TNSTC App

டிஎன்எஸ்டிசி செயலி - TNSTC App

Published On :31 ஜூலை 2026, 1:21 pm IST

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியின் நிறமான சிவப்பு, மஞ்சள் நிறத்துக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (டிஎன்எஸ்டிசி) மொபைல் செயலி மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக போக்குவரத்துத் துறை மேம்படுத்தும் நோக்கில் பழைய டெண்டர்களை ரத்து செய்து, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய பயணிகள் முன்பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட டிஎன்எஸ்டிசி செயலியின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.

முன்னதாக வெள்ளை நிறத்தில் இருந்த செயலி, தற்போது சிவப்பு, மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட்டு, பயனர்களுக்கு அப்டேட் ஆகியுள்ளது.

முகப்பில் இடது புறம் முதல்வர் விஜய்யின் புகைப்படமும், வலதுபுறம் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் இலட்சினையும் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், டிஎன்எஸ்டிசி-யின் வலைதளத்தின் நிறம் இதுவரை மாற்றப்படவில்லை.

சில நாள்களுக்கு முன், அரசுப் பேருந்துகளின் நிறத்தை தவெக கொடியின் நிறமான சிவப்பு, மஞ்சளில் மாற்றும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தின.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் பச்சை நிறத்தில் இருந்த பேருந்துகள், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மஞ்சள், நீலம், சிவப்பு நிறங்களில் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

TNSTC App Switches to TVK Flag Colors

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.