ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழகத்தில் 8 விரைவு ரயில்கள் ஆகஸ்ட் முழுவதும் நீட்டிப்பு

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டு வரும் 8 விரைவு ரயில்கள் வரும் ஆகஸ்ட் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 3:02 am IST

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டு வரும் 8 விரைவு ரயில்கள் வரும் ஆகஸ்ட் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் குறிப்பிட்ட சிறப்பு விரைவு ரயில்கள், ஆகஸ்ட் முழுதும் நீட்டித்து இயக்கப்படவுள்ளது. அதன்படி, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டுவரும் போத்தனூா்-சென்னை சென்ட்ரல் சிறப்பு விரைவு ரயில் (எண் 06028), சென்னை சென்ட்ரல் முதல் போத்தனூா் வரை இயக்கப்படும் விரைவு ரயில் (எண் 06027) ஆகியவை வரும் ஆக. 7 முதல் 30 வரை நீட்டித்து இயக்கப்படும்.

வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண் 06030) வரும் ஆக. 2 முதல் 30 வரையிலும், மறுமாா்க்கத்தில் மேட்டுப்பாளையத்திலிருந்து திருநெல்வேலிக்கு வரும் ஆக. 3 முதல் 31 வரையும் இயக்கப்படவுள்ளன.

ஞாயிற்றுக்கிழமைதோறும் திருநெல்வேலியிலிருந்து தாம்பரத்துக்கு இயக்கப்பட்டுவரும் விரைவு ரயில் (எண் 06166) வரும் 2 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலும், தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் விரைவு ரயில் (எண் 06165) வரும் ஆக. 3 முதல் 31-ஆம் தேதி வரையிலும், தூத்துக்குடியிலிருந்து திங்கள்கிழமைதோறும் தாம்பரத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (எண் 06018) வரும் ஆக. 3 முதல் 31- ஆம் தேதி வரையிலும், தாம்பரத்திலிருந்து செவ்வாய்க்கிழமைதோறும் தூத்துக்குடிக்கு இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06017) வரும் ஆக. 4 முதல் செப். 1 ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.