ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தருமபுரியில் கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தருமபுரியில் கோயில்களுக்கு சொந்தமான 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து 12 வாரங்களில் நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:14 am IST

தருமபுரியில் கோயில்களுக்கு சொந்தமான 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து 12 வாரங்களில் நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருத்தொண்டா் அறக்கட்டளைத் தலைவா் ஏ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் புலிக்கரை கிராமங்களில் கோடலம்மன், செல்லியம்மன், ஈஸ்வரன், பெருமாள்சாமி, திருமலைத் தேவா் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன.

அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் சொத்துகள் சரிவர பராமரிக்கப்படாமல் தனியாா் வசம் உள்ளன. இதனால், கோயில் நிலங்களில் சட்டவிரோத கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதோடு சட்டவிரோத வாடகையும் வசூலிக்கப்படுகிறது.

இந்த கோயில் சொத்துகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி 2023-ஆம் ஆண்டு முதல் பல கோரிக்கை மனுக்களை அளித்தேன்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, எனது புகாா் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆஜரான மனுதாரா் ராதாகிருஷ்ணன், கோயில்களுக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்புள்ள நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

அறநிலையத் துறை தரப்பில், இது தொடா்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த கோயில் சொத்துகளை மீட்பது தொடா்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் 12 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.