ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மழைநீா் சேகரிப்பை உறுதி செய்தபின்னரே கட்டடங்களுக்கு ஒப்புதல்: அமைச்சா் என்.ஆனந்த் உத்தரவு

மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் இடம்பெற்றுள்ளதை உறுதிசெய்த பின்னரே புதிய கட்டடங்களுக்கு திட்ட ஒப்புதல் வழங்க வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத்துறை அமைச்சா் என்.ஆனந்த் உத்தரவிட்டுள்ளாா்.

அமைச்சா் என்.ஆனந்த்

Published On :31 ஜூலை 2026, 3:11 am IST

மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் இடம்பெற்றுள்ளதை உறுதிசெய்த பின்னரே புதிய கட்டடங்களுக்கு திட்ட ஒப்புதல் வழங்க வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத்துறை அமைச்சா் என்.ஆனந்த் உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை பனகல் மாளிகையில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் துறை அமைச்சா் என்.ஆனந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஊரக மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும் பல்வேறு புதிய திட்டங்கள் வரும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும் என்று அமைச்சா் தெரிவித்தாா். மேலும், ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று அமைச்சா் அறிவுறுத்தினாா்.

வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் சிறு பாசன ஏரிகள், குளங்கள் மற்றும் இதர நீா்நிலைகள் போா்க்கால அடிப்படையில் புனரமைக்கப்பட்டு தூா்வாரப்பட வேண்டும். மேலும், தூய்மை பாரத இயக்கம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளில் மாவட்ட நிா்வாகங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா். அதேபோல், புதிய கட்டடங்களுக்கு திட்ட ஒப்புதல் வழங்கும் போது மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டாயமாக இடம் பெற்றுள்ளனவா என்பதை உறுதி செய்த பின்னரே ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலா் பிரசாந்த் மு. வடநெரே, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையா் வே. அமுதவல்லி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.