ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த அவகாசம் நீட்டிப்பு

சமதளப் பகுதிகளில் அமைந்துள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 30.6.2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tamil Nadu Government Secretariat

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் - கோப்புப் படம்

Published On :30 ஜூலை 2026, 4:11 am IST

சமதளப் பகுதிகளில் அமைந்துள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 30.6.2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து நகா் ஊரமைப்பு ஆணையா் அலுவலகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

20.10.2016 அல்லது அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சமதளப் பகுதிகளில் உள்ள விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் திட்டம், அரசாணை எண் 78 (04.05.2017) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 30.6.2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பொதுமக்கள்https://tcponline.tn.gov.in/ எனும் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.