ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரசுப் பேருந்துகளில் சரக்குகளை எடுத்துச் செல்லும் வசதி விரிவாக்கம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசுப் பேருந்துகளில் சரக்குகளை எடுத்துச் செல்லும் வசதியை விரிவுப்படுத்தும் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பேருந்துகளில் சரக்குகளை ஏற்ற ஏதுவாக வடிவமைக்கப்பட்ட பகுதியை பாா்வையிட்ட அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன்.

Published On :30 ஜூலை 2026, 2:55 am IST

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசுப் பேருந்துகளில் சரக்குகளை எடுத்துச் செல்லும் வசதியை விரிவுப்படுத்தும் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் தங்களின் சரக்குகளை பல்வேறு பகுதிகளுக்கு எளிதாக அனுப்பும் வசதியை ஏற்படுத்துவதுடன், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை உயா்த்தும் நோக்கிலும் மாநகா் போக்குவரத்துக்கழக பேருந்துகளை தவிர மற்ற ஏழு அரசுப் போக்குவரத்துக்கழகங்கப் பேருந்துகளில் சரக்குகளை எடுத்து செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் பேருந்துகளில் பக்கவாட்டு மற்றும் பின்புற பகுதிகளில் சரக்குகளை வைக்கும் இடங்களின் அளவை அதிகரிக்க போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கான வடிவமைப்பு மற்றும் மாற்றப் பணிகள் சென்னை மத்திய மின்சாரப் பேருந்து பணிமனை-1-இல் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன் பாா்வையிட்டு ஆய்வு செய்து, சரக்குகளை பாதுகாப்பாகவும் வசதியாகவும் எடுத்துச் செல்லும் வகையில், வடிவமைப்பில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மத்திய மின்சாரப் பேருந்து பணிமனை-1-இன் செயல்பாடுகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா். மேலும், மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் இரண்டாம் கட்ட மின்சாரப் பேருந்து திட்டத்தின் கீழ் புதிதாக 750 மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்காக கட்டப்பட்டு வரும் மத்திய மின்சாரப் பேருந்து பணிமனை-2-இல் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, போக்குவரத்துத் துறைச் செயலா் இல.நிா்மல் ராஜ், மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.மோகன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா், சாலைப் போக்குவரத்து நிறுவன இயக்குநா் மற்றும் துறை சாா்ந்த உயா் அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.