ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்! தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? பெ. சண்முகம் கேள்வி!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி...

P Shanmugam

பெ. சண்முகம் - X | CPIM Tamilnadu

Published On :28 ஜூலை 2026, 4:45 pm IST

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது தொடர்பாக தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரானாா் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் மாணவர்களுக்கு பட்டமளித்தார்.

இந்த நிகழ்வில், ஆளுநர் பங்கேற்றதால், ஆளுநர் மாளிகையிலிருந்து வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி, முதலில் 'வந்தே மாதரம்', இரண்டாவதாக 'தேசிய கீதம்' மற்றும் மூன்றாவதாக 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்படும் என்று ஏற்கெனவே பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், திருநெல்வேலி எம்பி ராபா்ட் புரூஸ், நெல்லை தவெக எம்எல்ஏ முருகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ள பெ. சண்முகம் பதிவிட்டிருப்பதாவது:

“மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம். தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?

தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் - அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Tamil Thai Vazhthu relegated to third place - What is the Tamil Nadu government's stance - Pe. Shanmugam asks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.