
ஆளுநர் பட்டம் வழங்க மறுப்பு! நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது பற்றி...
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு - DIN
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றுகிறது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் இருந்து இருந்து நேரடியாக பட்டம் மற்றும் பதக்கங்களைப் பெற இந்தாண்டு 871 பேர் தகுதி பெற்றிருந்தனர்.
அதாவது 163 ஆண்கள், 595 பெண்கள் என மொத்தம் 758 டாக்டர் படிப்பு முடித்தவர்களும், 12 ஆண்கள், 101 பெண்கள் என 113 பதக்க வெற்றியாளர்களும் நேரடியாக ஆளுநரிடம் பட்டம் பெறுவார்கள் என பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கூறியிருந்தனர்.
ஆனால் உடல்நிலை காரணமாக தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு மட்டும் ஆளுநர் நேரடியாக பட்டங்களை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் ஆத்திரமடைந்தனர்.
தொடர்ந்து அவர்கள் கூறுகையில், "முனைவர் பட்டம் பெற நாங்கள் காலை 4 மணிக்கு எல்லாம் எங்களது வீட்டில் இருந்து புறப்பட்டு ஆளுநரின் கையால் பட்டம் பெற போகிறோம் என்ற ஆசையுடன் இங்கு வந்து இருக்கையில் அமர்ந்துள்ளோம். ஆனால் தற்போது தங்கப்பதக்கம் பெற்றவர்கள் மட்டுமே ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற முடியும் என்று கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது. இதற்கு எதற்காக எங்களை நேரில் வரவழைக்க வேண்டும். நீங்கள் பதிவு தபாலில் எங்களது பட்டங்களை வீட்டுக்கு அனுப்பி இருக்கலாமே" என்று கூறினர்.
தொடர்ந்து துணை வேந்தர் சந்திரசேகர் கூறுகையில், "ஆளுநரின் உடல்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மீதமுள்ள பட்டம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஆளுநர் மேடையில் அமர்ந்திருக்கும் போது அவர் முன்னிலையில் சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்குவார்" என்றார்.
இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் ஆளுநரிடம் ஆலோசித்து விட்டு முடிவை தெரிவிப்பதாக துணை வேந்தர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். அதன் பின்னர் ஆளுநரிடம் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் நேரடியாக பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து ஆளுநர் அனைவருக்கும் நேரடியாக பட்டங்களை வழங்குவதாக சம்மதித்தார். அதனை தொடர்ந்து பட்டமளிப்பு விழா தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஆளுநர் கையில் பட்டம் பெற ஒரு மாணவி மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு அழைப்பு விடுத்தும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல முனைவர் பட்டம் பெற இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலும் இன்று விழாவில் பங்கேற்கவில்லை.
இன்றைய ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்வில், வந்தே மாதரம், தேசிய கீதத்தைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாகவே பாடப்படும் என பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே அமைச்சர் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
Summary
Convocation ceremony of Nellai Manonmaniam Sundaranar University attended by the Governor
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




