ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது பற்றி...

M. Veerapandian, Communist Party of India

மு. வீரபாண்டியன் - DIN

Published On :27 ஜூலை 2026, 5:09 pm IST

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திங்கள்கிழமை (ஜூலை 27) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என்று கூறி மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு மீண்டும் அனுமதி தர மறுத்துள்ளது .

2017 மெட்ரோ ரயில் கொள்கையின் குறைந்தபட்ச விதிமுறையான 20 லட்சம் மக்கள் தொகை இருக்கவேண்டும் என்பதை காரணமாக சுட்டிக் காட்டி, சுமார் 15.8 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோயம்புத்தூர், சுமார் 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட மதுரை  ஆகியவற்றுக்கான மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

ஆனால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், ஏறக்குறைய கோவை மற்றும் மதுரைக்கு சமமான  மக்கள் தொகையைக் கொண்ட ஆக்ரா, போபால், பாட்னா போன்ற வட இந்திய நகரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களுக்கு இந்த அனுமதி மறுத்திருப்பது என்பது மத்திய அரசின் பாரபட்ச போக்காகும். இது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டுக்கு எதிரான இத்தகைய போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். உடனடியாக கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மத்திய பாஜக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு  வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என்று மு. வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

Summary

The Communist Party of India condemned the Central Government's decision to once again reject the Madurai and Coimbatore Metro Rail projects on Monday (July 27).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.