ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கிட வேண்டும்! - திருமாவளவன் கோரிக்கை

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கிட வேண்டும் என அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்திருப்பது குறித்து...

Appointment orders must be issued to elementary education teachers

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் - எக்ஸ்

Published On :27 ஜூலை 2026, 3:04 pm IST

நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக காத்திருக்கும் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு திங்கள்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த 2013 , 2017, 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தகுதி தேர்வுகளில் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி பலமுறை தேர்ச்சி பெற்ற 21,515 ஆசிரியர்கள் இன்னும் பணிநியமனம் செய்யப்படாமல் இருக்கின்றனர்.

இதற்கிடையே 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 149-ன் மூலம் தகுதி தேர்வு மட்டுமல்லாமல் நியமனத் தேர்வு என்று ஒன்றை புதிதாக அறிமுகப்படுத்தி அதிலும் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. எனினும், கடந்த 8 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே இந்த நியமனத் தேர்வு நடைபெறுள்ளது.

2021ல் 730, 2022ல் 3987, 2023ல் 6553 என மொத்தம் 2023 ஆம் ஆண்டு வரையில் 11,270 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இன்று வரையில் நிரப்பப்படவில்லை. 2024 ஆம் ஆண்டு 2768 காலிப்பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு நியமனத் தேர்வின் மூலம் 20 மாவட்டங்களில் மட்டுமே பணி நியமனங்கள் செய்யப்பட்டது.

அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திகளின் அடிப்படையில் தற்போது தொடக்க கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 26,428 ஆகும்.

எனவே, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நியமனத் தேர்வில் 21,515 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 80% மேல் பெண்கள் உள்ளனர். 13 ஆண்டுகளாக காத்திருக்கும் இவர்களின் ஏழ்மையான குடும்பச் சூழல், வாழ்வாதாரம், கல்வி மற்றும் அனுபவத்தை கருத்தில் கொண்டு இவர்களை விரைவாக பணி நியமனம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கல்வியை மேம்படுத்திட நிரந்தர ஆசியர்களை நியமிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Summary

Appointment orders must be issued to elementary education teachers! - Thirumavalavan's demand...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.