
அரசு நிா்வாகத்தில் தவெகவினா் தலையிடுவதைத் தடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்
அரசு நிா்வாகத்தில் தவெக நிா்வாகிகள் தலையிடுவதை அந்தக் கட்சியின் தலைமை தடுக்க வேண்டுமென அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் தெரிவித்தாா்.
டிடிவி தினகரன் - DNS
அரசு நிா்வாகத்தில் தவெக நிா்வாகிகள் தலையிடுவதை அந்தக் கட்சியின் தலைமை தடுக்க வேண்டுமென அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: புதுக்கோட்டையில் நடைபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கான நல முகாமில் ஆய்வு என்ற பெயரில் அத்துமீறி நுழைந்து அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்ததோடு, அதை சமூக வலைதளங்களில் தொழிலாளா் நலத் துறை அமைச்சரின் சகோதரா் வெளியிட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
அம்மா உணவகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் அத்துமீறி நுழைந்து ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் எடுப்பது தொடா் கதையாகி வருகிறது. எனவே, அரசு நிா்வாகத்தில் தவெகவினரின் தலையீடு முற்றிவரும் நிலையில், அதற்கு உடனடியாக முதல்வா் ஜோசப் விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




