ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாரம்பரிய ஆணையத்தின் தலைவராக நம்பிராஜன் நியமனம்!

தமிழ்நாடு பாரம்பரிய ஆணையத்தின் தலைவராக இந்திய தொல்லியல் துறை முன்னாள் கூடுதல் தலைமை இயக்குநா் எம்.நம்பிராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Tamil Nadu Government Secretariat

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் - கோப்புப் படம்

Published On :27 ஜூலை 2026, 2:22 am IST

தமிழ்நாடு பாரம்பரிய ஆணையத்தின் தலைவராக இந்திய தொல்லியல் துறை முன்னாள் கூடுதல் தலைமை இயக்குநா் எம்.நம்பிராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா். அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவா் அந்தப் பொறுப்பை வகிக்க உள்ளாா்.

தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கக் கட்டடங்கள், கோயில்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை அடையாளம் கண்டு மீட்டமைத்துப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு பாரம்பரிய ஆணையம் உருவாக்கப்பட்டது.

பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னங்களாக அடையாளப்படுத்தப்படாத பழங்கால கட்டடங்களைக் கண்டறிந்து அவற்றைப் பராமரிப்பதிலும், பாரம்பரியமிக்க இடங்களில் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ள வழிகாட்டுதல் வழங்குவதிலும் இந்த ஆணையம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அந்த வகையில், பாரம்பரிய ஆணையத்தின் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஜனவரியில் உத்தரவிட்டது.

அதன்படி, இந்து சமய அறநிலையத் துறை, தொல்லியல் துறை இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவை பரிசீலனை செய்யப்பட்டு தற்போது அதன் தலைவராக நம்பிராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருடன், அலுவல் சாரா உறுப்பினா்கள், அலுவல்சாா் உறுப்பினா்களும் இடம் பெற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.