ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் லாக்கர் திறப்பு!

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லாக்கர் திறக்கப்பட்டிருப்பது பற்றி....

Digital lockers opened at Nellai Railway Station for passenger convenience

டிஜிட்டல் லாக்கர்.

Published On :26 ஜூலை 2026, 12:51 pm IST

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், பயணிகளின் பொருட்கள் பாதுகாப்பாக வைக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 'டிஜிட்டல் லாக்கர்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியானது முதல் பிளாட்பாரத்தில், வடக்கு நுழைவு வாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் லாக்கர் செயல்பாட்டு முறை:

* பயணிகள் தங்கள் செல்போன் எண்ணைப் பதிவு செய்து, ஓ.டி.பி (OTP) பெற்றுக்கொள்ள வேண்டும்.

* அதன் மூலம் வரும் 'கியூஆர் கோடு' (QR Code) வாயிலாகப் பணம் செலுத்தி, பயணிகள் தாங்களாகவே லாக்கர் பெட்டியைத் திறக்கலாம்.

* வெளியூர் சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்து, எளிதாகப் பெட்டியைத் திறந்து தங்கள் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும்.

* மேலும், இந்தப் பகுதி 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் முழுமையாகக் கண்காணிக்கப்படும்.

அடுத்த கட்ட விரிவாக்கம்:

தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை சென்ட்ரல், காட்பாடி, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த வசதி நடைமுறையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது நெல்லையிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்தொடர்ச்சியாக, அடுத்த கட்டமாக மதுரை, கோவில்பட்டி, தூத்துக்குடி, திருச்செந்தூர், காரைக்குடி, திண்டுக்கல் மற்றும் பழனி ஆகிய ரயில் நிலையங்களிலும் இத்தகைய டிஜிட்டல் லாக்கர் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

As various amenities are being upgraded at Tirunelveli Junction Railway Station, a modern technology-enabled 'digital locker' facility has been set up to safely store passengers' belongings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.