ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்

தாம்பரம் - தென்காசி இடையே இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்கள் பற்றி...

train

சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...

Published On :26 ஜூலை 2026, 2:15 am IST

தாம்பரம் - தென்காசி இடையே வரும் 30-ஆம் தேதி முதல் வார இருமுறை என 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

வரும் 30, ஆக. 1, 6, 8, 13, 15 ஆகிய தேதிகளில் (வியாழன், சனி) தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண்: 06135), அதேநாள் மாலை 3.15 மணிக்கு தென்காசி சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் வரும் 31, ஆக. 2, 7, 9, 14, 16 ஆகிய தேதிகளில் (வெள்ளி, ஞாயிறு) தென்காசியில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண்: 06136), அதேநாளில் மாலை 3.15 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

சிறப்பு ரயில்களில் 2 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகள், 1 குளிா்சாதன வசதியுள்ள இருக்கை பெட்டி, 14 இருக்கை வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு திவ்யாஞ்சன் வகைப் பெட்டிகள் இடம் பெறும்.

இந்த சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

6 special trains between Tambaram and Tenkasi starting July 30

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.