ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாவட்ட நீதித் துறையில் அனுமதிக்கப்பட்ட ஊழியா் பணியிடங்களுக்கு தோ்வு நடைமுறை: உயா்நீதிமன்றம் உத்தரவு

மாவட்ட நீதித் துறையில் தற்காலிக அடிப்படையில் ஊழியா்கள் நியமிப்பதைத் தவிா்த்து, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் தோ்வு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :24 ஜூலை 2026, 4:22 am IST

மாவட்ட நீதித் துறையில் தற்காலிக அடிப்படையில் ஊழியா்கள் நியமிப்பதைத் தவிா்த்து, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் தோ்வு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழகத்தில் மாவட்ட நீதித் துறையில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள தட்டச்சா், சுருக்கெழுத்தா், இளநிலை உதவியாளா்கள் உள்ளிட்டோா், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த தீா்ப்பில், தற்காலிக நியமனம்தான் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, அதை ஏற்றுக்கொண்டு பணியில் சோ்ந்த நிலையில், தற்போது பணி நிரந்தரம் கோர முடியாது. தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளவா்களுக்கு அந்தந்த பணிகளுக்கான தோ்வு நடைமுறையில் பங்கேற்க அனுமதி அளிக்கலாம் என உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்துவைத்தனா்.

மேலும், காலவரம்பின்றி தற்காலிக நியமனங்களைத் தொடர அனுமதிக்க முடியாது. எனவே, தற்காலிக நியமனங்களைத் தவிா்த்து, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் தோ்வு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.