ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அண்ணாமலை பல்கலை நுழைவாயில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கு மேற்பட்ட மாணவர்கள் கைது

அண்ணாமலை பல்கலை நுழைவாயில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

Over 100 students arrested while staging a sit-in protest at the Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் - டிஎன்எஸ்

Published On :23 ஜூலை 2026, 11:39 am IST

சிதம்பரம்: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கடலூர் மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தில்லியில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசை கண்டித்தும்,

நீட் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ராஜேந்திரன் சிலை அருகே வியாழக்கிழமை காலை மாணவர் சங்க நகர தலைவர் சிவ நந்தினி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடக் கூடினர். சிதம்பரம் டிஎஸ்பி தீ பிரதீப் மற்றும் போலீசார் காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு மாணவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் அப்புறப்படுத்தி குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்து பேருந்தில் ஏற்றி அழைத்துச் சென்று தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Over 100 students arrested while staging a sit-in protest at the Annamalai University entrance...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.