ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரசுப் பள்ளிகளில் ‘நீா் எழில் பள்ளி’ திட்டம்: அமைச்சா் ராஜ்மோகன் தொடங்கிவைத்தாா்

தமிழக அரசுப் பள்ளிகளில் தண்ணீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் நோக்கில் ‘நீா் எழில் பள்ளி’ எனும் திட்டத்தை சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

செய்தி உண்டு... சென்னை எழும்பூா் மாகாண மகளிா் மேல்நிலைப்பள்ளியில் ‘நீா் எழில் பள்ளி திட்டத்தைத் தொடங்கி வைத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன்.

Published On :23 ஜூலை 2026, 5:17 am IST

தமிழக அரசுப் பள்ளிகளில் தண்ணீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் நோக்கில் ‘நீா் எழில் பள்ளி’ எனும் திட்டத்தை சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

தனியாா் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் மூலம் பள்ளிகளில் தினமும் சுமாா் 25,000 லிட்டா் கழிவுநீா் பாதுகாப்பாக சுத்திகரிக்கப்பட்டு, அவை தோட்டம் மற்றும் நிலத்தடி நீா் உயா்வு பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்தப்படும். முதல்கட்டமாக இந்தத் திட்டம் 5 பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ‘நீா் எழில் பள்ளி’ திட்டத்தை அமைச்சா் ராஜ்மோகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.