ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

‘என் குழந்தையிடம் பள்ளியை சுத்தம் செய்ய சொன்னாலும் தவறாக நினைக்க மாட்டேன்’... அமைச்சர் விஜய் தமிழன் பேச்சு!

பள்ளியில் என் குழந்தையை சுத்தம் செய்யச் சொன்னாலும் தவறாக நினைக்க மாட்டேன் என பள்ளி மாணவர்களிடையே அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் பேசியது வைரல்.

பள்ளிக் கட்டடங்களைத் திறந்து வைத்து மாணவர்களிடம் பேசிய அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்.

Published On :22 ஜூலை 2026, 2:53 pm IST

பள்ளியில் என் குழந்தையை சுத்தம் செய்யச் சொன்னாலும் தவறாக நினைக்க மாட்டேன் எனப் பள்ளி மாணவர்களிடையே போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் பேசியது வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவிற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டடம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வகுப்பறைக் கட்டடம், சுகாதாரத் துணை மையம் உள்ளிட்டவற்றை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேற்று (ஜூலை 21) திறந்து வைத்தார்.

இந்த நிலையில், பெத்தநாயக்கன்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டடங்களைத் திறந்து வைப்பதற்காக சென்ற அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனுக்கு பள்ளி குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதன் பின்னர் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், பள்ளி குழந்தைகளிடம் உரையாடினார்.

அப்போது அவர், “என் குழந்தையை பள்ளி வகுப்பறையை கூட்ட சொன்னால்கூட தப்பா நினைக்க மாட்டேன். நான் பள்ளியில் படிக்கும் பொழுது நாங்கள்தான் பள்ளி வகுப்பறையையும் பள்ளி வளாகத்தையும் சுத்தம் செய்வோம்.

வகுப்பறையில் உள்ள கரும்பலகைக்கு கரும்மை பூசியதும் நாங்கள்தான். அப்படி படித்ததால்தான் இந்த நிலைக்கு வந்துள்ளோம். நீங்கள் நன்றாக படியுங்கள். வாழ்க்கையில் படிப்பு தான் முக்கியம். பள்ளியில் ஆசிரியர் சொல்வதையும் வீட்டில் அப்பா - அம்மா சொல்வதையும் கேளுங்கள்” எனப் பேசிய விடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Summary

Minister Vijay Tamilan Parthiban urged the students to take responsibility and clean the school themselves.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.