ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தில்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்... முதல்வர் மௌனம் காப்பது ஏன்? - அப்பாவு கேள்வி

தமிழத முதல்வர் விஜய் மௌனம் முதல்வர் காப்பது ஏன்? என முன்னாள் பேரவைத் தலைவர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளது குறித்து...

TN Assembly EX speaker M Appavu

அப்பாவு - PTI

Published On :22 ஜூலை 2026, 12:29 pm IST

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்கீழ் (சிஜேபி) தில்லியில் திங்கள்கிழமை ஒன்றுதிரண்ட ஆயிரக்கணக்கான இளைஞா்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் சம்பவம் நாடே அதிர்ச்சிக்குள்ளாகி உள்ள நிலையில், தமிழத முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? என முன்னாள் பேரவைத் தலைவர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்கீழ் (சிஜேபி) தில்லியில் திங்கள்கிழமை ஒன்றுதிரண்ட ஆயிரக்கணக்கான இளைஞா்கள், நாடாளுமன்றம் நோக்கி நாடாளுமன்ற சாலையில் நுழையும்போதே, காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். பெண்கள் உள்பட பலரின் மீதும் தடியடி நடத்தினர். இதனால் பாதுகாப்புப் படையினா் மற்றும் போராட்டக்காரா்கள் இடையே வெடித்த மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈா்த்தது.

இந்த நிலையில், தமிழத முதல்வர் விஜய் மௌனம் முதல்வர் காப்பது ஏன்? என முன்னாள் பேரவைத் தலைவர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

நீட் தேர்வுக்கு எதிராக தலைநகர் தில்லியில் ஜந்தர் மந்தர் மைதானத்தில் காக்ரோச் ஜனதா பார்ட்டி இளைஞர்கள், இளம் பெண்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் லட்சக்கணக்கில் திரண்டு, காவல்துறையின் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளுக்கு கலங்காமல் அறவழியில் போராட்டத்தை தொடர்கிறார்கள்.

ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் இதே ஜந்தர் மந்தரில் அப்போதைய காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராக பாஜக, அன்னா ஹசாரே தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட போது ஓடோடி சென்று, ஆதரவு குரல் கொடுத்த முதல்வர், தற்போது எங்கு பதுங்கி இருக்கிரீர்கள் ?

தில்லி காவல்துறை மக்களுக்காக போராடும் நம் இளைஞர்களை கண்மூடித்தனமாக தாக்கி மண்டையை உடைத்த போதும் கண்டனக் குரல் எழுப்பாமல் மௌனம் முதல்வர் காப்பது ஏன்?

உங்கள் நண்பர் பாடகர் அறிவை சென்னை கோட்டை முன் கோசம் இடுவது போல் குரல் எழுப்ப செய்து உடனே உங்கள் அறைக்கு அழைத்து பேசி நடத்திய நாடகம் தமிழ்நாட்டில் சந்தி சிரிக்கிறது முதல்வரே?

நாடே கொந்தளித்து நிற்க தவெகவும், உங்கள் தோழமை கட்சிகளும் ஜனநாயகன் பட வெளியீட்டு விழாவை கொண்டாடி மகிழும் உங்களுக்கு மனசாட்சியே இல்லையா ?

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டிக்க உங்களுக்கும் உங்கள் தோழமை கட்சிக்கும் துணிவில்லையா?

கர்நாடக முதல்வரிடம் தண்ணீரைக் கேட்டு பெற விடாமல் தடுப்பது கல்லாப் பெட்டி காங்கிரஸா? அல்லது தில்லி எஜமானர் பாஜகவா ?

தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து காவு கொடுக்கும் உங்கள் அரசை மக்கள் மிக விரைவிலேயே தூக்கி எறிந்து தக்க பாடம் புகட்டுவார்கள் என அப்பாவு கூறியுள்ளார்.

Summary

Attack on students in Delhi... Why is the Chief Minister maintaining silence? - Appavu questions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.